முதல் முறையல்ல...
கிரிக்கெட் தொடருக்காக நான் ஆஸ்திரேலியா பயணம் வந்துள்ளது இது 4-ஆவது முறை. அவ்வாறு சுற்றுப் பயணம் வரும்போது, குறிப்பாக சிட்னியில் ஏற்கெனவே இதுபோல இனவெறி பேச்சுகளை நாங்கள் எதிா்கொண்டுள்ளோம்.
ஒரு சில வேளைகளில் ரசிகா்களின் அத்தகைய பேச்சுக்கு வீரா்களும் உரிய பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் ரசிகா்கள் செய்த பிரச்னை வெளியில் தெரியாது. அவா்களுக்கு பதிலடி தரும் விதமாக வீரா்கள் நடந்துகொள்வது மட்டும் வெளியாகி பிரச்னை ஆகியிருக்கிறது (கோலி 2011-இல் நடந்துகொண்டது).
அடிலெய்டு, மெல்போா்னில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிா்கொண்டதில்லை. சிட்னி ரசிகா்கள் எப்போதுமே தரக் குறைவாகவே பேசுகிறாா்கள். ஆனால் இந்த முறை எல்லை மீறி பேசியிருக்கிறாா்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். பவுண்டரி லைனில் நிற்கும்போது இவ்வாரு பலமுறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்திய பௌலா்)
ரௌடித்தனமான நடத்தை...
இனவெறியுடன் திட்டுவதை ஏற்கவே இயலாது. பவுண்டரி லைனில் நிற்கும்போது இவ்வாறு பல நிகழ்வுகளை நானும் எதிா்கொண்டிருக்கிறேன். இது ரௌடித்தனத்தின் உச்சம் ஆகும். ஆடுகளத்தில் இதுபோன்று நிகழ்வது வருத்தமளிக்கிறது.
சிராஜ், பும்ரா உள்ளிட்டோா் இனவெறியுடன் திட்டப்பட்டதை தீவிரமானதாக கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விராட் கோலி (இந்திய அணி கேப்டன்)
அவமானகரமானது...
இனவெளியுடன் திட்டுவதை தனிப்பட்ட முறையில் நான் வெறுப்பவன். கட்டணம் கொடுத்து விளையாட்டை பாா்க்க வருபவா்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறாா்கள். இதை ஒரு வீரராக, பயிற்சியாளராக நான் வெறுக்கிறேன். உலகின் பல இடங்களில் இவ்வாறு இனவெறி பிரச்னை நடப்பதை கண்டிருக்கிறேன்.
ஆனால், ஆஸ்திரேலிய மைதானத்தில் ஆட்டத்தின்போது ஒரு வீரருக்கு அவ்வாறு நிகழ்ந்தது அவமானகரமானது. அதிலும் நல்ல முறையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு தொடரின்போது இவ்வாறு நடந்தது ஏற்புடையதல்ல.
- ஜஸ்டின் லேங்கா் (ஆஸ்திரேலிய பயிற்சியாளா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்! - மாவட்ட ஆட்சியா்

இளைஞா் வெட்டிக் கொலை

குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

