கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆஸ்திரேலிய அணிக்கு முழு நேர பயிற்சியாளராக விருப்பமில்லை: ஸ்டீவ் வாஹ

மெல்போர்ன், ஜன.8: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முழு நேர பயிற்சியாளராக விருப்பமில்லை என்று அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்தார்.  இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு வாஹ் அளித்த பேட்டி: ஆஷஸ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

மெல்போர்ன், ஜன.8: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முழு நேர பயிற்சியாளராக விருப்பமில்லை என்று அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்தார்.

 இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு வாஹ் அளித்த பேட்டி: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதுதான். ஆனால் தோல்வியிலிருந்து ஆஸ்திரேலிய அணி மீளும்.

 ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் பயிற்சியாளராகும் திட்டம் என்னிடம் இப்போது இல்லை.

 ஏற்கெனவே இப்போதுள்ள பயிற்சியாளரை மாற்றப் போவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அடுத்த பயிற்சியாளர் யார் என்ற பட்டியலில் என்னுடைய பெயரும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

 ஆனால் முழு நேர பயிற்சியாளராக மாறும் திட்டம் என்னிடம் இல்லை. இப்போது நான் சமூக சேவை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் என்னுடைய தொழிலையும் கவனிக்க வேண்டியுள்ளது.

 குடும்பத்தையும் நான் நிர்வகிக்கவேண்டும். எனவே பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது. ஆனால் ஆஸ்திரேலிய அணி மீண்டு வர நான் உதவி செய்வேன். அதற்காக சில தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

 ஆனால் இதை பகுதி நேரமாகத்தான் செய்ய முடியும். முழு நேரமாக என்னால் செய்ய முடியாது.

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அணிக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய தொழில், சமூக சேவை பணிகளால் என்னால் பயிற்சியாளராக இயலவில்லை.

 அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.