ஒரே கல்லில் இரண்டு மாங்காய்-ஐ.பி.எல்.
சமீபத்தில் முடிவடைந்த 4-வது ஐ.பி.எல். போட்டியில் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஐபிஎல் போட்டியில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு சாதனைகளைப் போல சர்ச்சைகளுக்கும் குறைவில்ல


சமீபத்தில் முடிவடைந்த 4-வது ஐ.பி.எல். போட்டியில் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஐபிஎல் போட்டியில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு சாதனைகளைப் போல சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.
வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுகிறார்கள். அதிலும் கம்பீர் போன்றவர்கள் காயத்தை மறைத்து விளையாடியுள்ளனர் என ஒரு சிலரும், விளையாடுவது நாட்டுக்காகவா அல்லது கிளப்புகளுக்காகவா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை வீரர்களுக்கு மட்டுமே உள்ளது என முன்னாள் கேப்டன் கபில்தேவும் கூறியுள்ளனர்.
சர்ச்சைகள் ஒருபுறம் இருப்பினும், ஐ.பி.எல். போட்டியின் சாதகங்களையும் ஒதுக்கிவிடமுடியாது. இந்த போட்டியைப் பொறுத்தவரையில் எந்த ஒருவீரரும் சர்வதேச அளவிலான போட்டியைப் புறக்கணித்துவிடவில்லை.
சிலருக்கு இந்தப் போட்டியில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அவர்களை பணத்திற்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று விமர்சிப்பது சரியாக இருக்காது. காயம் என்பது எல்லா நேரங்களிலும் ஏற்படுவதுதான்.
இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல களமாக இருந்திருக்கிறது ஐபிஎல். வளர்ந்து வரும் இளம் வீரர்கள் தங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ள இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்றால் அது சந்தேகமே. ஐபிஎல் போட்டியின் மூலமாகவே பால் வல்தாட்டி, மனோஜ் திவாரி போன்ற வீரர்கள் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பை சிலர் பெற்றுள்ளனர். பஞ்சாப் அணியில் விளையாடி வரும் முன்னாள் வீரர் ஜெப் மார்ஷின் மகன் ஷான் மார்ஷ் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடியதாலேயே ஆஸ்திரேலிய அணியினரால் அடையாளம் காணப்பட்டார்.
இதுமட்டுமின்றி சென்னை அணி என்றால் அதில் தமிழக வீரர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் சில மூத்த வீரர்களிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இளம் வீரர்களுக்கு எளிதாகக் கிடைத்தது.
ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான அணிகளின் பயிற்சியாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இதனால் மிகச்சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்தது.
பிரபலமான பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி பெற வேண்டுமானால் லட்சக்கணக்கான பணத்தை ஒரு வீரர் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் ஐபிஎல் போட்டியிலோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல பணத்துடன், இலவசமாகப் பயிற்சியும் கிடைத்துள்ளது.
இந்திய வீரர்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் போட்டியால் ஆதாயம் பெற்றாலும், பக்கத்து நாடான பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரமை கொல்கத்தாவின் பயிற்சியாளராக நியமிக்கும்போது, பாகிஸ்தான் வீரர்களை மட்டும் அணியில் சேர்க்க மறுப்பது ஏன்?
பகைமையை மறந்து நட்புறவு பாராட்டுவதுதானே விளையாட்டு. அத்தகைய விளையாட்டிலேயே பாகிஸ்தானைச் சேர்க்க மறுக்கின்றோம்.விளையாட்டுடன் அரசியலை கலப்பது என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இனி வரும் போட்டிகளிலாவது பாகிஸ்தான் வீரர்களைச் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இருநாட்டு மக்களிடையே நட்பு வலுப்பட இது மிகவும் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...