சீன மங்கையின் பிரெஞ்சுப் புரட்சி!
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே டென்னிஸில் கோலோச்சி வந்த காலம்போய், இப்போது ஆசியாவைச் சேர்ந்தவர்களும் முத்திரைப் பதிக்கத் தொடங்கியுள்ளனர். பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து


அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே டென்னிஸில் கோலோச்சி வந்த காலம்போய், இப்போது ஆசியாவைச் சேர்ந்தவர்களும் முத்திரைப் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து போட்டிகளில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சீனர்கள், இப்போது மெல்ல, மெல்ல டென்னிஸ் பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற சீனாவின் லீ நா.
ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதன் மூலம் சீனாவின் புதிய தேவதையாக உருவெடுத்துள்ள லீ நா, கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் சீனப் பெண் மட்டுமல்ல, ஆசியாவின் முதல் பெண்ணும்கூட.
அமெச்சூர் பாட்மிண்டன் வீரரின் மகளாக பிறந்த லீ நா, தனது 6-வது வயதிலேயே பாட்மிண்டன் விளையாட ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் லீ நாவின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர், லீ நாவுக்கு டென்னிஸ் ஏற்றதாக இருக்கும் என்று எண்ணினார்.
அவர் தனது கருத்தை லீ நாவின் பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் சற்று தயக்கம் காட்டினர். அந்த நேரத்தில் சீனாவில் டென்னிஸ் பிரபலம் அடைந்திருக்கவில்லை என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். அவர்களுக்கு டென்னிûஸப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் டென்னிஸ் மைதானத்தை நேரில் சென்று பார்க்க விரும்பினர். மைதானத்தை பார்த்தவுடனேயே தங்கள் மகளை டென்னிஸ் விளையாட வைக்க முடிவு செய்தனர் லீ நாவின் பெற்றோர்.
பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் வேண்டுகோளை சற்றும் தயங்காமல் ஏற்றுக்கொண்ட லீ நா, தனது 9-வது வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார். 15-வது வயதில் சீனாவின் டென்னிஸ் அணியில் சேர்ந்த அவர், 17-வது வயதில் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தார்.
கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டபோதும் லீ நாவால், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடுவதற்குத் தகுதிபெற முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த அவர், 2002-ம் ஆண்டு டென்னிûஸ விட்டுவிட்டு இதழியல் படிப்பதற்காக சென்றார்.
அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் 2004-ம் ஆண்டு டென்னிஸýக்குத் திரும்பினார். அந்த ஆண்டு சீனாவின் குவாங்ஜௌவில் நடைபெற்ற மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டபிள்யூ.டி.பி. போட்டியில் பட்டம் வென்ற முதல் சீன வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அது அவருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
அதன்பிறகு டென்னிஸில் வேகமாக முன்னேறிய அவர், 2006 விம்பிள்டன் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய முதல் சீனப் பெண், தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிய சீனப் பெண் என்ற சாதனைகளை எட்டினார்.
2006-ல் தனது பயிற்சியாளர் ஜியாங் ஷானை திருமணம் செய்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினார் லீ நா. இதனால் சீன டென்னிஸ் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார். டென்னிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லீ நாவை கடுமையாக விமர்ச்சித்தனர்.
இதன்பிறகு இடைவிடாத முயற்சியால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும், அவரின் கனவு நனவாகவில்லை. பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டர்ஸிடம் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் தோற்றார். அப்போது லீ நா 29 வயதை எட்டிவிட்டார். அவர் டென்னிஸýக்கே லாயக்கில்லை என்று சீன ஊடகங்கள் விமர்ச்சித்தன. இன்னும் சிலர் பயிற்சியாளரை மாற்றிவிடுமாறு கூறினர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானபோதும், அதிலிருந்து மீண்டெழுந்த லீ நா பிரெஞ்ச் ஓபனில் களமிறங்கினார். இறுதிச்சுற்றில் அவர் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் கடந்த முறை பட்டம் வென்ற இத்தாலியின் ஷியாவோனேயை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
சர்ச்சைகளால் ஓரம் கட்டப்பட்டிருந்த லீ நா, இந்த வெற்றியால் சீனாவின் புதிய அடையாளமாக மாறியுள்ளார். இந்த வெற்றி அவரை தரவரிசையில் 4-வது இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்கு முன் ஜப்பானின் கிமிகோ டேட்-கிரம் மட்டுமே ஆசியாவில் இருந்து தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் முன்னணி சமூக வலைதளமான மைக்ரோ பிளாக்கில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் லீ நாவைப் பாராட்டியுள்ளனர். 20 லட்சத்துக்கு மேற்பட்டார் லீ நாவின் ரசிகர்ளாக தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
2008-ல் அவரை தங்கள் அமைப்பில் இருந்து வெளியேற்றிய சீன டென்னிஸ் சங்கமும் இப்போது வெகுவாக புகழ்ந்து வருகிறது. "லீ நாவின் வெற்றி சீனாவில் டென்னிûஸ அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதனால் கூடைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸýக்கு அடுத்தபடியாக சீன மக்களிடையே டென்னிஸ் பெரும் வரவேற்பைப் பெறும் எனநம்பலாம்.
சீனாவின் கூடைப்பந்து சூப்பர்ஸ்டார் யாவ் மிங்குக்கு நிகராக லீ நா போற்றப்பட்டு வருகிறார். லீ நாவின் வெற்றியால் சீனா முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்திருந்தாலும், அவரோ இன்னும் சீனா திரும்பவில்லை.
விம்பிள்டன் போட்டியை முடித்துவிட்டே சீனா திரும்ப இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வெற்றிக் கொண்டாட்டத்தால் விம்பிள்டன் போட்டிக்கான தனது பயிற்சி எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் லீ நா உறுதியாக இருக்கிறார்.
ஐரோப்பாவில் தங்கி பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ள லீ நா, இந்த ஒரு வெற்றியோடு தனது சாதனைப் பயணம் நின்றுவிடக்கூடாது என்று கூறிவிட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கிவிட்டார்.
பிரெஞ்ச் ஓபன் வெற்றியால் மிகுந்த தன்னம்பிக்கைய பெற்றுள்ளதாகக் கூறிய லீ நா, சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல; உடல் நலமோடு இருக்கும் வரை நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும் என்கிறார் நம்பிக்கையோடு.
சீனர்களில் பலருக்கு முன்னுதாரணமாக உயர்ந்துள்ள லீ நாவின், விம்பிள்டன் லட்சியம் ஈடேறட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...