நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ஆஸ்திரேலியத் தொடரில் இந்தியாவுக்கு காத்திருக்கிறது சவால்

மும்பை, அக்.8: ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

மும்பை, அக்.8: ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்காது. இந்திய அணி முழு பலத்தோடு விளையாடும் என்றாலும், கடந்த காலங்களில் விளையாடியதைவிட இப்போது சற்று கவனத்தோடு விளையாட வேண்டும்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அப்போது இந்திய அணி கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தோனி சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிப்பது குறித்து பேசிய அவர், முன்பெல்லாம் ஒரு தொடரில் தோற்றுவிட்டாலே தனித் தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற பேச்சு இருந்தது. இப்போதைய சூழலில் இந்திய அணிக்கு தனித் தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி சிந்திப்பது சரியானதாக இருக்காது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

தோனியின் கேப்டன்ஷிப் குறித்துப் பேசிய அவர், இந்திய அணிக்கு தோனி சிறப்பான தலைமை வகித்து வருகிறார். அவர் சரிவிலிருந்து நிச்சயம் மீண்டெழுவார். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடர். வெளிநாட்டில் விளையாடுவதும், அங்கு வெற்றிபெறுவதும் ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமானது.

தோனி தனக்கு இங்கிலாந்துத் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் அதற்குத் தகுதியானவர். எனினும் மூத்த வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாலேயே தேர்வுக்குழுவினர் அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியத் தொடருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக அவருக்கு நிச்சயம் ஓய்வு தேவை.

இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேர்வுக்குழுவினர் வாய்ப்பு அளித்திருப்பது நல்ல விஷயம். அவர்கள் அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய இது நல்ல வாய்ப்பாக இருக்கும். ஜாகீர்கானின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணிக்கு நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதால், இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியமானது.

இந்திய அணி ஜாகீர்கான் இல்லாமலேயே வேகப்பந்து வீச்சை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு இப்போது 33 வயதாகிவிட்டது. காயத்தால் அவதிப்பட்டு வரும் அவரால் நீண்ட காலம் விளையாட முடியாது. இன்னும் 2 ஆண்டுகளில் அவர் 35 வயதை எட்டிவிடுவார்.

எனவே டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி ஆகியவற்றில் எந்த வகையான போட்டியில் அவரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வுக்குழுவினர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். இதேபோல் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளிண்டாப் ஓய்வுக்கு முன்பே குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்றார்.

இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்பஜன் நீக்கப்பட்டது குறித்துப் பேசிய கங்குலி, அவர் இந்தத் தொடரை இழந்திருந்தாலும், அவருக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு முழு உடற்தகுதியுடன் வருவார். ஹர்பஜன் இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாது என்றார்.

இந்திய வீரர்களின் காயம் குறித்துப் பேசிய அவர், அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது காயம் ஏற்படத்தான் செய்யும். எல்லா அணிகளுமே ஏராளமான போட்டிகளில் விளையாடுகிறது. ஆனால் வீரர்களுக்கு அவ்வப்போது சரியான ஓய்வளித்து முக்கியமான தொடர்களுக்கு புத்துணர்வோடு அவர்களை கொண்டு வருவது மிக முக்கியமானது என்றார்.

குழந்தைகள்கூட நம்பாது

அக்தரின் பந்துவீச்சைக் கண்டு சச்சின் பயந்தார் என்பதை குழந்தைகள்கூட நம்பாது என்று சௌரவ் கங்குலி தெரிவித்தார்.

தனது பந்துவீச்சைக் கண்டு சச்சின் பயந்தார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது சுயசரிதை புத்தகமான "கான்ட்ரோவெர்ஸியலி யுவர்ஸ்'}இல் குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் மேலும் கூறியது:

வேகப்பந்து வீச்சைக் கண்டு சச்சின் அஞ்சினார் என்று கூறுவதை எனது மகள்கூட நம்பமாட்டார். அவர் 100-வது சதத்தை எட்டும் நிலையில் உள்ளார். வேகப்பந்துவீச்சுக்கு பயந்திருந்தால் அவரால் எப்படி 20 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். நல்ல பார்மில் இருந்தார், பார்மில் இல்லை என்று கூறலாமே தவிர, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை எனக் கூற முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.