விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உலக ஹாக்கித் தொடர்: மும்பைக்கு 2-வது வெற்றி

சென்னை, மார்ச் 6: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் மும்பை மெரைன்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:37 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, மார்ச் 6: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் மும்பை மெரைன்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் மூலம் சென்னைக்கு கோல் கிடைத்தது. இம்ரான் வார்ஸி இந்த கோலை அடித்தார். 13-வது நிமிடத்தில் மும்பையின் தேவிந்தர் வால்மீகி பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார்.

24-வது நிமிடத்தில் மும்பையின் அனுப் அந்தோனி, அற்புதமான கோல் ஒன்றை அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது மும்பை.

இதன்பிறகு 42-வது நிமிடத்தில் ஆஜ்மிர் சிங்கும், 52-வது நிமிடத்தில் விமல் லகராவும் கோலடிக்க மும்பையின் வெற்றி உறுதியானது. 66-வது நிமிடத்தில் சென்னை வீரர் சுனில் யாதவ் கோல் அடித்தார். இறுதியில் மும்பை அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

சென்னை சீட்டாஸ் வீரர்கள், தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்ததும் அவர்களின் தோல்விக்கு காரணமானது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சென்னை அணி இதுவரை 4-ல் விளையாடி 2 தோல்விகளையும், 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

கர்நாடகம் வெற்றி: பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் கர்நாடகா லயன்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் சண்டீகர் கமெட்ஸ் அணியை வீழ்த்தியது.

12 வீரர்களுடன் விளையாடிய மும்பை

இந்த ஆட்டத்தில் இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய மும்பை அணி 11 பேருக்குப் பதிலாக 12 பேருடன் களமிறங்கிவிட்டது. 3 நிமிடங்களுக்குப் பிறகே கூடுதலாக ஒரு வீரருடன் மும்பை விளையாடுவதை சென்னை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மும்பை கேப்டன் அட்ரியான் டிசெüசா, நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.

இம்ரான் வார்ஸி 8 கோல்

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் வீரரான இம்ரான் வார்ஸி இந்த ஆட்டத்தில் அடித்த கோலோடு சேர்த்து இதுவரை மொத்தம் 8 கோல்களை அடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.