கொல்கத்தா நைட் ரைடர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 50 பந்துகளில் 9 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்து மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைய வைத்தார்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூர் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் முரளி கார்த்திக்கிற்குப் பதிலாக கர்நாடக பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். நைட் ரைடர்ஸ் அணியில் பிரெட் லீ, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோருக்குப் பதிலாக ரியான் மெக்லாரன், பிரதீப் சங்வான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான மன்விந்தர் பிஸ்லா முதல் ஓவரிலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் கம்பீருடன் இணைந்தார் காலிஸ். ஒரு முனையில் கம்பீர் பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் நிதானமாக ஆடிய காலிஸ் 16 ரன்களில் வினய் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கம்பீர் அரைசதம்: இதையடுத்து களம்புகுந்த யூசுப் பதான், வினய் குமார் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி தனது ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எட்டியது நைட் ரைடர்ஸ்.
அந்த அணி 95 ரன்களை எட்டியபோது யூசுப் பதான் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து திவாரி களம்புகுந்தார். தொடர்ந்து வேகம் காட்டிய கம்பீர் 39 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திவாரி 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது.
கெயில் ருத்ரதாண்டவம்: 155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் மயங்க் அகர்வால் 6 ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ் கெயிலுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. மெக்லாரன் வீசிய 3-வது ஓவரில் முதல் சிக்ஸரை அடித்து தனது சிக்ஸர் மழையைத் தொடங்கினார் கெயில். மெக்லாரன் வீசிய 6-வது ஓவரில் கோலி இரு பவுண்டரிகளை விளாச, கெயில் தன் பங்குக்கு இரு பிரமாண்ட சிக்ஸர்களை அடித்தார்.
இதன்பிறகு சங்வான் வீசிய 9-வது ஓவரில் கெயில் ஒரு பவுண்டரியை அடிக்க, கோலி அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார். இதனால் பெங்களூர் 9 ஓவர்களில் 75 ரன்களை எட்டியது. எனினும் பாலாஜி வீசிய அடுத்த ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து டிவில்லியர்ஸ் களம்புகுந்தார். இதன்பிறகு கெயில் அசுர வேகத்தில் ஆடினார். சங்வான், பாலாஜி, காலிஸ், ரஜத் பாட்டியா என எல்லோரையும் பந்தாடினார். இதனால் அவ்வப்போது பந்துகள் சிக்ஸருக்கு பறந்தன.
பாலாஜி வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸரை விளாசிய கெயில், 3-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாச, பெங்களூர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கெயில் 85, டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது பெங்களூர். அதேநேரத்தில் கொல்கத்தா இரண்டாவது தோல்வியைத் தழுவியுள்ளது.
கம்பீர்-கோலி மோதல்
அதிரடியாக விளையாடிய பெங்களூர் கேப்டன் விராட் கோலி, பாலாஜி வீசிய 10-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா வீரர்கள் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தனர்.
அதனால் திடீரென கோபமடைந்த விராட் கோலி, பெவிலியனுக்கு திரும்புவதற்குப் பதிலாக மைதானத்துக்குள் வந்து திட்டவே, பதிலுக்கு கம்பீரும் கோலியை நோக்கி கோபத்துடன் வந்தார். அதற்குள் ரஜத் பட்டியா அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்திய அணிக்காக ஒன்றாக இணைந்து விளையாடி வரும் இவர்கள் இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள். இந்திய அணிக்காக மட்டுமின்றி, மாநில அணிக்காகவும், வடக்கு மண்டல போட்டி மற்றும் ஓ.என்.ஜி.சி. அணியிலும் ஒன்றாக இணைந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போட்டி முடிந்த பிறகு இதுகுறித்துப் பேசிய கம்பீர், "விளையாட்டில் இது சகஜமானதுதான். மைதானத்துக்கு வெளியில் இதை ஒரு பிரச்னையாகப் பார்க்கமாட்டோம்' என்றார்.
ஆனால் விதிமுறைகளை மீறியதாகக் கூறி கம்பீர், கோலி இருவரும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்கோர் போர்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
விக்கெட் வீழ்ச்சி: 1-3 (பிஸ்லா), 2-54 (காலிஸ்), 3-95 (பதான்),
4-124 (கம்பீர்), 5-132 (மோர்கன்), 6-135 (திவாரி),
7-149 (மெக்லாரன்), 8-149 (பாட்டியா).
பந்து வீச்சு: மோசஸ் ஹென்ரிக்ஸ் 4-0-24-2, ஆர்.பி.சிங் 4-0-27-3,
ஜெயதேவ் உனட்கட் 4-0-34-0, முத்தையா முரளீதரன் 4-0-30-0,
வினய் குமார் 4-0-36-2.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விக்கெட் வீழ்ச்சி: 1-12 (அகர்வால்), 2-75 (கோலி).
பந்து வீச்சு: ரியான் மெக்லாரன் 3-0-34-1, ஜாக்ஸ் காலிஸ் 4-1-30-0,
சுனில் நரேன் 4-0-17-0, எல்.பாலாஜி 3.3-0-33-1,
பிரதீப் சங்வான் 2-0-34-0, ரஜத் பாட்டியா 1-0-10-0.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிா்கட்சியினா் டெபாசிட் இழப்பா்! - செங்கோட்டையன்

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

மாதரவம் தொகுதியைத் தக்க வைக்கும் முனைப்பில் திமுக! 2-ஆவது முறையாகக் கைப்பற்றும் வேகத்தில் அதிமுக!!

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


