விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

"சேவாக் இனி இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பில்லை'

சேவாக் இனி இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 12:59 am IST

சேவாக் இனி இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சேவாக்கின் ஆட்டத்திறன் மங்கத் தொடங்கிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். மோசமான பார்ம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட சேவாக்கிற்கு, இங்கிலாந்தின் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான உத்தேச அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாய்காட் மேலும் கூறியது: இந்திய அணிக்காக சேவாக் மீண்டும் விளையாடுவார் என்று நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். தற்போது இளம் வீரர்களுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி வருகிறது.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றபோதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி வாய்ப்பு கொடுத்தால்தான் உலகக் கோப்பை போட்டிக்காக சிறந்த அணியை உருவாக்க முடியும். சேவாக் சில மைதானங்களில் சிறப்பாக விளையாடி ரன் குவித்துள்ளார்.

ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சில மைதானங்களில் அவர் சரியான முறையில் தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டதில்லை. எனினும் சேவாக் போன்ற வீரர்கள் தங்களின் ஆட்டமுறைகளை மாற்றுவது கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.