விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நியூஸிலாந்து ஓபன்: 3-வது சுற்றில் ஜெயராம், அரவிந்த் பட்

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:01 am IST

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் அஜய் ஜெயராம் 24-22, 21-5 என்ற நேர் செட்களில் நார்வேயின் மரியஸ் மிர்ரையும், இந்தியாவின் அரவிந்த் பட் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரரான கிர்தேஷ் தின்ட்வாலையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 3-வது சுற்றில் அஜய் ஜெயராம், தென் கொரியாவின் ஜி ஹூன் ஹிங்கையும், அரவிந்த் பட், இந்தோனேசியாவின் ஆன்ட்ரேவையும் சந்திக்கின்றனர்.

மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் குருசாய் தத், ஆனந்த் பவார், சேதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாரதா ஜஸ்தி 21-18, 17-21, 17-21 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் விக்கி கோப்லேன்டிடம் தோல்வி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.