கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

முதல் 10 இடத்தில் புஜாரா, அஸ்வின், ஓஜா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் புஜாரா, அஸ்வின், ஓஜா ஆகியோர் மட்டும் முதல் 10 இடத்தில் இடம்

Updated On :21 ஏப்ரல் 2013, 9:22 pm

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் புஜாரா, அஸ்வின், ஓஜா ஆகியோர் மட்டும் முதல் 10 இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் புஜாரா 7-வது இடத்தையும், பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் 6-வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஓஜா 10-வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடத்துக்குள் வரவில்லை. தென்னாப்பிக்காவின் ஹஷிம் ஆம்லா பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் சந்தர்பால், தென்னாப்பிரிக்காவின் மற்றொரு வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோர் முறையே 2,3-வது இடத்தில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கேப்டன் தோனி 22-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 24-வது இடமும், சச்சின் 26-வது இடமும் பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து டேல் ஸ்டெயின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் மற்றொரு பந்துவீச்சாளர் பிலாண்டர், இலங்கையின் ரங்கணா ஹெராத் ஆகியோர் முறையே 2,3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வே கேப்டன் பிரென்டன் டெய்லர், தரவரிசையில் 41 இடங்கள் முன்னேறி 29 இடத்தைப் பிடித்துள்ளார். இதுவே தரவரிசைப் பட்டியலில் அவரது அதிகபட்ச இடமாகும். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் மற்றும் 20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் 3-வது இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.