தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: இன்று தொடக்கம்

88-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

Updated On :11 செப்டம்பர் 2013, 5:52 pm

88-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவில், பழமையான ஹாக்கி தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் முருகப்பா ஹாக்கிப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை, இந்திய ஸ்டீல் ஆணையம் மற்றும் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அணிகள் விளையாட உள்ளன.

10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 2.5 லட்சம் ரொக்கம் பரிசளிக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

இப்போட்டி முதன்முதலாக, 1901-ம் ஆண்டு "மெட்ராஸ் சேலஞ்ச் கோப்பை' என்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிவு "ஏ': இந்தியன் ஆயில், தெற்கு மத்திய ரயில்வே, ராணுவ லெவன், இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை, இந்திய ஓவர்சீஸ் வங்கி.

பிரிவு "பி': ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பஞ்சாப் தேசிய வங்கி, இந்திய ஸ்டீல் ஆணையம், இந்திய வங்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.