ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது புணே வாரியர்ஸ்.
முதலில் பேட் செய்த புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி, மோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அல்பி மோர்கல், அனிருத்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சென்னையில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் புணே வாரியர்ஸ் அணியில் கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் இடம்பெற்றார். ராஸ் டெய்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். யுவராஜ் சிங் காயம் காரணமாக இடம்பெறாததால், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டார்.
ஆரோன் பிஞ்ச் அரைசதம்: டாஸ் வென்ற புணே வாரியர்ஸ் கேப்டன் ராஸ் டெய்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் புணேவின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.
டிர்க் நேன்ஸ் வீசிய முதல் ஓவரில் ஆரோன் பிஞ்ச் 3 பவுண்டரிகளை விரட்ட அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. ஒருபுறம் உத்தப்பா நிதானமாக ஆட, மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதனால் 7-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது புணே வாரியர்ஸ்.
மோரிஸ் வீசிய 9-வது ஓவரில் பவுண்டரியை அடித்து 32 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஜடேஜா வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க கிரீûஸ விட்டு வெளியே வந்தபோது, தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் ஆரோன் பிஞ்ச். அவர் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். ஆரோன் பிஞ்ச்-ராபின் உத்தப்பா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி: இதையடுத்து கேப்டன் ராஸ் டெய்லர் களம்புகுந்தார். அந்த அணி 101 ரன்களை எட்டியபோது 26 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா ஆட்டமிழந்தார். இதன்பிறகு டெய்லர் 8, மார்ஷ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் மணீஷ் பாண்டே களம்புகுந்தார். டிர்க் நேன்ஸ் வீசிய, ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டன.
ரிவர்ஸ்வீப் சிக்ஸர்: பிராவோ வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் ரிவர்ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து அசத்தினார் ஸ்டீவ் ஸ்மித்.
அந்த ஓவரின் 5-வது பந்தில் மணீஷ் பாண்டே 9 ரன்களில் போல்டு ஆனார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித், ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.
சூப்பர் கிங்ஸ் தரப்பில் கிறிஸ் மோரிஸ், வேயன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மைதானத்தில் கூட்டம் குறைவு
வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது மைதானம் முழுவதுமாக நிரம்பிவிடும். கடந்த இரு ஆட்டங்களிலும் மைதானம் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்தப் போட்டிக்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை. இதனால் மைதானத்தில் பாதியளவுக்கும் குறைவான ரசிகர்களே இருந்தனர்.
புணே அணி கடந்த ஆட்டங்களில் மோசமாக விளையாடி தோற்றிருந்ததால், இந்த ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்காது என்று நினைத்தே ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக டிக்கெட் வாங்கி வைத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் வாங்கிய விலையைவிட குறைவான விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்ய முன்வந்தபோதும் டிக்கெட் வாங்க யாரும் இல்லை.
ஸ்கோர் போர்டு
புணே வாரியர்ஸ்
ராபின் உத்தப்பா (சி) ஜடேஜா (பி) மோரிஸ்2633
ஆரோன் பிஞ்ச்(ஸ்டம்பிட்) தோனி (பி) ஜடேஜா6745
ரோஸ் டெய்லர்(சி) ஜடேஜா (பி) மோரிஸ்813
ஸ்டீவன் ஸ்மித்நாட் அவுட் 3916
மிச்சல் மார்ஷ்(சி) மோர்கல் (பி) பிராவோ24
மணிஷ் பாண்டே(பி) பிராவோ98
அபிஷேக் நய்யார்நாட் அவுட்01
உதிரிகள்8
மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு )159
விக்கெட் வீழ்ச்சி: 1-96 (பிஞ்ச்), 2-101 (உத்தப்பா), 3-118 (டெய்லர்), 4-128 (மார்ஷ்), 5-159 (பாண்டே).
பந்து வீச்சு: டிர்க் நேன்ஸ் 4-0-42-0, ஜடேஜா 4-0-27-1,
அஸ்வின் 4-0-24-0, மோரிஸ் 4-0-25-2, பிராவோ 4-0-35-2
இன்றைய ஆட்டங்கள்
மோதும் அணிகள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா
நைட் ரைடர்ஸ்
கேப்டன்கள்
ஆடம் கில்கிறிஸ்ட் - கெளதம் கம்பீர்
இடம்: மொஹாலி | நேரம்: மாலை 4
மோதும் அணிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ்
கேப்டன்கள்
விராட் கோலி - ஜெயவர்த்தனே
இடம்: பெங்களூர் | நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


