ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லி டெஸ்ட்: ரஹானே மீண்டும் சதம்: தெ.ஆ. வெற்றி பெற 481 ரன்கள் இலக்கு

தில்லியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார்.

News image
Updated On :6 டிசம்பர் 2015, 11:53 am

பெர்லின்

தில்லியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். வெற்றிக்கு 481 ரன்கள் இலக்கு என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 117.5 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 49.3 ஓவர்களில் 121 ரன்களுக்குச் சுருண்டது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய இந்திய  அணி  மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோலி 83 ரன்களுடனம், ரஹானே 52 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 88 ரன்களில் அபாட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து எதிர்முனையில் பொறுமையாக விளையாடி வந்த ரஹானே அதிரடி காட்ட தொடங்கினார். முதல் இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்த அவர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். ரஹானே சரியாக 100 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோலி டிக்ளர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்திய அணி 100.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றி பெற 481 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் எலிகர் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து  4 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்த வந்து கேப்டன் ஆம்லாவும் பௌமாவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 38.4 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகப் பொறுமையாக 117 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பௌமா அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார்.

பின்னர் களம் இறங்கிய டிவில்லியர்ஸும் இந்திய பவுலர்களை கடுமையாக சோதித்தார். அவர்  தான் சந்தித்த 33-வது பந்தில்தான் முதல் ரன்னே எடுத்தார்.  ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஆம்லா 207 பந்துகளை சந்தித்து 23 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 91 பந்துகளை சந்தித்து 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எட்டு விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 409 ரன்கள் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.