கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய பல்கலைக்கு இடையேயான நெட்பால் போட்டி: அண்ணாமலைப் பல்கலை. முதலிடம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையான நெட்பால் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று

News image
Updated On :24 பிப்ரவரி 2015, 1:55 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையான நெட்பால் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி முதலிடத்தை கைப்பற்றியது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் நெட்பால் விளையாட்டு போட்டி கடந்த பிப்.20-ம் தேதி தொடங்கியது. 51 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவியர்கள் பங்கேற்று விளையாட்டினர். நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் குருஷேத்ரா பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு அணிகள் இறுதி போட்டிக்கு தேர்ச்சி பெற்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு அணிகளும் மோதிக்கொண்டன. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி, குருஷேத்திரா பல்கலை. அணியை 30-20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை குருஷேத்திரா பல்கலை அணியும், மூன்றாவது இடத்தை பஞ்சாப் பல்கலைக்கழக அணியும், நான்காவது இடத்தை கோழிகோடு பல்கலைக்கழக அணியும் பெற்றன.

பரிசளிப்பு விழா: பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி அணியினை பாராட்டினார். விவாவில் பதிவாளர் முனைவர் ந.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், உடற்கல்வித்துறை தலைவர் வி.ஜெயந்தி வேளாண்புல முதல்வர் ஜெ.வசந்தகுமார், பொறியியல் புல முதல்வர் எஸ்.வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முனைவர் பி.வி.செல்வம், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் எஸ்.உமாநாத், முனைவர் ஜி.சாமிநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.