மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாஹாவுக்கு பதில் விக்கெட் கீப்பிங் செய்யும் பரத்; காரணம் இதுதான்

இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 7:51 am

DIN

கான்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தொடங்கியபோது, இஷாந்த் சர்மா முதல் பந்தை வீச தயாராக இருந்தார். அப்போது, வீக்கெட் கீப்பராக நின்று கொண்டிருந்தது கே.எஸ். பரத். சாஹா அல்ல. 

பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ, "சாஹாவால் தனது கழத்தை அசைக்க முடியவில்லை. எனவே, அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் கீப்பங் செய்வார்" என டவிட்டரில் குறிப்பிட்டது.

மேலும், சாஹாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவருக்கு எந்தளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 

இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாய்ப்பு சாஹாவுக்கு கிடைத்தது. வங்காளத்தை சேர்ந்த சாஹா, உலக கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். 

ஆனால், பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர், முதல் இன்னிங்ஸ் 1 ரன்களை மட்டுமே எடுத்து தனது  விக்கெட்டை பறி கொடுத்தார். இதற்கு மத்தியில், சப்ஸ்டிடியூட் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள பரத், உள்ளூர் போட்டிகளிலும் இந்திய 'ஏ' அணிக்காகவும் சிறப்பாக ஆடிவருகிறார்.

26 வயதான பரத், உள்ளூர் போட்டிகளில் 37.24 ரன்களை சராசரியை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 9 சதத்தை அடித்துள்ளார். முதல் தர போட்டிகளில், 300 ரன்களை எடுத்த ஒரே வீக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.