கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பும்ரா அபாரமான பந்துவீச்சு: 110 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி 

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. 

News image
Updated On :12 ஜூலை 2022, 4:19 pm

DIN

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நிலைகுலைய வைத்தார். 

ஜேசன் ராய், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ரன்னேதும் எடுக்காமல் பூச்சியத்திலே விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் 30 ரன்களை எடுத்தார். மொயின் அலி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 25.2 ஒவர்களுக்கு 110 ரன்களை எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியாவின் சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் ஷமி 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தார். 

இரண்டாவது முறையாக இந்திய வீரர் பும்ரா ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் முதன்முறையாக ஒரு இந்திய பந்து வீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மிகக்குறைவான ஸ்கோர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.