நான் எப்போதும் சேவாக் ஆகப்போவதில்லை : ராகுல் திராவிட் 

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் எப்போதும் விரேந்திர சேவாக் மாதிரி ஆகப்போவதிலை என கருத்துத் தெரிவித்துள்ளார். 
நான் எப்போதும் சேவாக் ஆகப்போவதில்லை : ராகுல் திராவிட் 


இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் எப்போதும் விரேந்திர சேவாக் மாதிரி ஆகப்போவதிலை என கருத்துத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் 1996இல் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். டெஸ்டில் 13288 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10889 ரன்களும் எடுத்தார். குறிப்பாக அவர் டெஸ்ட் போட்டியில் ‘இந்தியாவின் தூண்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதே சமயத்தில் விரேந்திர சேவாக் இந்தியாவின் அதிரடி மன்னன் என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படுவார். டிவிட்டரிலும் சேவாக் கலகலப்பாக இருக்கக்கூடியவர்.

ஒலிம்பிக்கின் தங்கம் வென்ற அபினவ் பிந்திராவுடன் பேசும்போது திராவிட் கூறியதாவது: 

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் என்னுடைய  ஆற்றலை சேமித்து வைத்திருப்பேன். நீண்ட நாட்களுக்கு விளையாடும் வகையில் எப்போதும் எனது ஆற்றலை சேமிக்கும் பழக்கம்தான் உண்மையான ஆட்டத்தினை மாற்றும் கருவியாக இருந்தது. நான் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தாலும் என்னுடைய ஆற்றலை விரிவுபடுத்தவே முயல்கிறேன். எப்போதும் ஆட்டத்தினைக் குறித்து மட்டுமே யோசிப்பேன். அதனால் கவலையடைந்திருக்கிறேன். இபோதெல்லம் முடிந்தவரை புத்துணர்ச்சியாக இருக்கிறேன்.

நான் எப்போதும் சேவாக் மாதிரி எளிமையாக என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. கிரிக்கெட்டிலிருந்து பொது வாழக்கையில் சகஜகமாக திடீரென மாற முடியவில்லை. இருப்பினும் தற்போது மாறிவருகிறேன். ஆனால் அவர் அளவுக்கு மாற முடியவில்லை. இதற்கு மனநிலையில் மாற்றம் தேவை. அதற்கான வழிகளைத்தான் தேடி வருகிறேன். உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் களத்தில் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் செலவிட்டு இதை மாற்ற முயற்சிக்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com