பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளது: இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (ஒருநாள், டி20) கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். 
பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளது: இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (ஒருநாள், டி20) கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி 24 நாட்களில் 12 டி20 போட்டிகள் 9 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளது. அதிலும் கடந்த இரண்டு வாரத்தில் 6இல் இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது முக்கியமான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் 1-1 என தொடர் சமநிலையில் முடிந்தது. இந்த தொடர் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் கூறியிருப்பதாவது: 

2வது ஒருநாள் போட்டியில் விளையாடியது போல தீவிரமான மனநிலை தற்போது இல்லை. முதல் 20 ஓவரில் 10 ஓவரில்தான் நாங்கள் அதே உற்சாகத்துடன் இருந்தோம். ஒரு அணியாக எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போட்டி மனப்பான்மையுடன் எங்களது விளையாட்டினை தீவிரமாகவும் சிறப்பாகவும் விளையாடுவோம். 

இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு போட்டிகள் விளையாடியது ஆச்சரியமாக உள்ளது.  கடினமான ஒன்றுதான். பயிற்சி எடுக்க போதிய நேரமில்லாமல் இருந்தது உண்மையில் விரக்தியாக இருந்தது. வீரர்களுடன் உரையாட வேண்டும், ஓய்வு எடுக்க வேண்டும், பயிற்சி எடுக்க வேண்டும் என நேரமே இல்லை. இருப்பினும் அணியாக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதுவும் ஒரு சவாலாகத்தான் இருந்தது. 

முறையாக பயிற்சி செய்தால் கிரிக்கெட்டில் ஒரு உயர்ந்த படிநிலையை இங்கிலாந்து அணியினால் உருவாக்க முடியும். இந்த குறிக்கோளை நோக்கி இனிமேல் பயணம் செய்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com