435 நாட் அவுட்...சாதனை நாயகன் அஸ்வின்

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில் தேவின் சாதனையை அவர் முறிடித்துள்ளார்.
ரவிசந்திரன் அஸ்வின்
ரவிசந்திரன் அஸ்வின்

இலங்கை அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அசாலங்காவின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் மற்றுமொறு சாதனைக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார் ரவிசந்திரன் அஸ்வின். 435 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவின் சாதனையை முறிடித்துள்ளார்.

85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 435 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். 132 போட்டிகளில் விளையாடிய கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில் தேவின் சாதனையை அவர் முறிடித்துள்ளார். டெஸ்ட் வரலாற்றிலேயே, இதுவரை நான்கு இந்தியர்கள்தான் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். கடந்தாண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங் சாதனையை அஸ்வின் முறியடித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையைும் அஸ்வின் இன்று படைத்துள்ளார். கபில் தேவை தவிர்த்து, நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீ (431), ரங்கனா ஹேரத் (433) ஆகியோரின் சாதனையையும் அஸ்வின் இன்று முறிடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com