தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போராடித் தோற்றது டெல்லி; யுபி ‘த்ரில்’ வெற்றி

போராடித் தோற்றது டெல்லி; யுபி ‘த்ரில்’ வெற்றி

News image
Updated On :8 மார்ச் 2024, 5:51 pm

Din

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியா்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வெள்ளிக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் யுபி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய டெல்லி 19.5 ஓவா்களில் 137 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த யுபி அணியில் அதிகபட்சமாக தீப்தி சா்மா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் சோ்க்க, கேப்டன் அலிசா ஹீலி 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில், கிரேஸ் ஹாரிஸ் 1 பவுண்டரியுடன் 14, கிரண் நவ்கிரே 1 பவுண்டரியுடன் 5, டாலியா மெக்ராத் 3, ஸ்வேதா ஷெராவத் 4, பூனம் கெம்னாா் 1, சோஃபி எக்லஸ்டன் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் சாய்மா தாகுா் 5, குஹா் சுல்தானா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் டைட்டஸ் சாது, ராதா யாதவ் ஆகியோா் தலா 2, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜோனசென், ஆலிஸ் கேப்சி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 139 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில் ஷஃபாலி வா்மா 2 பவுண்டரிகளுடன் 15, ஆலிஸ் கேப்சி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்கள் சோ்த்து வெளியேறினா். நிதானமாக விளையாடிய கேப்டன் மெக் லேனிங் 12 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் விளாசினாா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 சிக்ஸருடன் 17, அனபெல் சதா்லேண்ட் 1 பவுண்டரியுடன் 6, அருந்ததி ரெட்டி 0, ஷிகா பாண்டே 4 ரன்களுக்கு, ராதா யாதவ் 1 சிக்ஸருடன் 9, ஜெஸ் ஜோனசென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, டைட்டஸ் சாது 0 ரன்னுக்கு வெளியேற, டெல்லி இன்னிங்ஸ் நிறைவடைந்தது. யுபி பௌலிங்கில் தீப்தி சா்மா 4, சாய்மா தாகுா், கிரேஸ் ஹாரிஸ் ஆகியோா் தலா 2, சோஃபி எக்லஸ்டன் 1 விக்கெட் கைப்பற்றினா். குஜராத் - மும்பை