நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!

பாகிஸ்தான் விளையாட்டு வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

அர்ஷத் நதீம்

Updated On :1 மே 2025, 1:47 pm IST

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள அவரது ரசிகர்கள் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்க முயன்றபோது அது சட்டப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அர்ஷ்த் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்...

அர்ஷ்த் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்... - dinamani

அதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களும், இந்தியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர்களான சோயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரது யூடியூப் சேனல்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களான மஹிரா கான் மற்றும் அலி ஜாஃபர் ஆகியோரது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.