இந்திய செஸ் நட்சத்திரமும், ஐந்து முறை கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்வாகப் பொறுப்பேற்றுள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போரில் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய யூனியன் தடைவித்துள்ளது. அதன்படி, நடைபெற்று வரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட நபர்கள் பட்டியலில் தற்போதைய தலைவர் அர்காடி துவோர்கோவிச் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார்.
இந்த நிலையில், அவருக்குப் பதிலாக துணைத் தலைவராக இருந்த விஸ்வநாதன் ஆனந்த் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விஸ்வநாதன் ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அர்காடி டுவோர்கோவிச்சுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், நான் ஃபிடேவின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். அர்காடியின் தலைமைப் பண்புக்கும் ஃபிடேவுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபிடே கவுன்சிலுடன் இணைந்து பணியாற்றுவதிலும் உலகளவிலான செஸ் குடும்பத்துக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்துவேன். ஃபிடேவின் பணிகள் தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அர்காடி துவோர்கோவிச்சுக்கு என்ன ஆனது?
2012 முதல் 2018 வரை ரஷியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றிய துவோர்கோவிச், 2018 ஆம் ஆண்டு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து ஃபிடே அமைப்பை வழிநடத்தி வந்தார். ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், 2022-ஆம் ஆண்டில் துவோர்கோவிச்சின் வெற்றிக்கு ஆதரவளித்திருந்தார்.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடுடன் சென்னை ஃபிடே மாநாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையையும் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுள்ளார்.
Summary
Viswanathan Anand has taken over as interim FIDE president after EU sanctions hit Arkady Dvorkovich. Anand was working as the deputy FIDE chief after Dvorkovich came into power.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம், ஊழல் இருக்காது! புகார் அளிக்க தனி இணையதளம்!

சிரமங்களை எதிா்கொள்ளும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்: செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த்

அலாஸ்கனில் ஆனந்த், எரிகைசி; பைப்பா்ஸில் திவ்யா, காா்ல்சென்
பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



