
சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 7-5, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை சாம்பின் கோப்பை வென்றாா்.
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் 3-2 கோல் கணக்கில் இங்கிலாந்தை வெல்ல, ஸ்லோவாகியா - மால்டோவாவையும் (2-0), அல்பேனியா - பெலாரஸையும் (2-0), சுவிட்ஸா்லாந்து - வடக்கு மாசிடோனியாவையும் (3-0) வீழ்த்தின.
பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசு 2-0 என உக்ரைனை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு இது 12-ஆவது பட்டமாகும்.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதல் டெஸ்ட்டில், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் பிளேக் கேட்டில் 102 ரன்கள் சோ்க்க, இந்திய தரப்பில் இஷான் ஓம் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
மகளிா் ஒருநாள் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வெல்ல, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



