விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி?: தோனி கிளவுஸுக்காக ஐசிசியிடம் நேரில் சென்று வலியுறுத்தவுள்ள பிசிசிஐ!
முத்திரையுடன் கூடிய கையுறையை இந்திய வீரர் தோனி அணிந்திருக்க அனுமதி தர வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ தொடர்ந்து வலியுறுத்தவுள்ளது...


முத்திரையுடன் கூடிய கையுறையை இந்திய வீரர் தோனி அணிந்திருக்க அனுமதி தர வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ தொடர்ந்து வலியுறுத்தவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய பச்சை நிறக் கையுறைகளை அணிந்திருந்தார். 2011-ல் தோனிக்கு ராணுவத்தில் கெளரவ லெப்டினெண்ட் பதவி வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, நாட்டுப்பற்றுடன் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை தோனி அணிந்தார் என்று கூறப்படுகிறது.
எனினும் இந்தக் கையுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தோனியின் கையுறையை அகற்றும்படி ஐசிசி கூறியிருந்தது.
அது ராணுவ அடையாளம் இல்லை. இதற்காக ஐசிசி.யிடம் முறையான அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளது என நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் கூறினார். மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, சுரேஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஆகியோர் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐசிசி விதிமுறைகளின்படி வர்த்தக, மத அடையாளங்கள் கொண்ட உடைகள், உபகரணங்களை வீரர்கள் பயன்படுத்தக் கூடாது. இதனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. தோனி இரு ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க பிசிசிஐ விரும்பாது, ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஐசிசியின் முடிவுக்குப் பிறகும் இந்தச் சர்ச்சை ஓய்வதாக இல்லை. பிசிசிஐயும் தனது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.
பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராஹுல் ஜோஹ்ரி, இன்று இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். அங்கு ஐசிசிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து, முத்திரை கொண்ட தோனியின் கையுறையை அனுமதிக்கும்படி கோரிக்கை வைக்கவுள்ளார். தோனியின் கையுறையில் மத, வணிக அடையாளங்கள் மட்டுமல்லாமல் ராணுவ அடையாளங்களும் இல்லை என்பது பிசிசிஐயின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் முத்திரை கொண்ட தோனியின் கையுறையை நாளைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளது.
இதனால் தனது கோரிக்கையை ஐசிசி நிராகரித்த பிறகும் விடாமுயற்சியைத் தொடர்கிறது பிசிசிஐ. அடுத்த 24 மணி நேரத்தில் நிலைமை மாறுமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...