மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

20,000 சர்வதேச ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை!

இந்த ஆட்டத்தில் 37-வது ரன்னை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை எட்டினார் கோலி...

News image
Updated On :27 ஜூன் 2019, 12:21 pm

எழில்

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் இன்றைக்கும் விஜய் சங்கர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார். மே.இ. அணியில் ஆஷ்லி நர்ஸ், எவின் லூயிஸுக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ், ஃபெபியன் ஆலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த ஆட்டத்தில் 37-வது ரன்னை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை எட்டினார் கோலி. இதன் மூலம் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

* 20,000 சர்வதேச ரன்களை அதிவிரைவாக எடுத்துள்ள வீரர். இந்த இலக்கை எட்டிய 12-வது வீரர். இந்த இலக்கை எட்டியபோது 50 ரன்களைச் சராசரியாக வைத்திருந்த ஒரே வீரரும் கோலி தான். 

20,000 சர்வதேச ரன்கள்

417 இன்னிங்ஸ் - கோலி 
453 இன்னிங்ஸ் - சச்சின்  
453 இன்னிங்ஸ் - லாரா  
464 இன்னிங்ஸ் - பாண்டிங் 
483 இன்னிங்ஸ் - டி வில்லியர்ஸ்

விராட் கோலி - சர்வதேச ரன்கள்

முதல் 10,000 ரன்கள் - 232 இன்னிங்ஸ்
அடுத்த 10,000 ரன்கள் - 185 இன்னிங்ஸ்

* உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் எடுத்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி.

* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கோலியின் கடைசி ஆறு இன்னிங்ஸ் - 111*, 140, 157*, 107, 16 & 72.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.