ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

உலகக் கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் எதிர்பார்க்கும் மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள சச்சின் டெண்டுல்கர்...

News image
Updated On :31 மே 2019, 9:50 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள சச்சின் டெண்டுல்கர், மூன்று வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்.

இந்தியரல்லாத எந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்று வர்ணனையின்போது சச்சினிடம் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் அளித்த பதில்:

பேட்ஸ்மேன்களில் வார்னர் தான். ஐபிஎல்-லில் அவரைக் கடைசியாகப் பார்த்தபோது ரன்கள் குவிக்க மிகுந்த வேட்கையுடன் இருந்தார். ஏப்ரல் மாதம் இந்தியாவில் தீவிரமான வெப்ப வானிலை இருந்தும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். அவர் எப்போதும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பார். ஆனால் ஐபிஎல்-லில் இன்னும் கூடுதல் உடற்தகுதியுடன் இருந்தார். 

பந்துவீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சரைக் கவனிப்பதில் ஆர்வமாக உள்ளேன். பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியும். விக்கெட் எடுக்க நினைக்கும்போது அவரை இங்கிலாந்து அணி பந்துவீச அழைக்கலாம். 

ஆர்ச்சருடன் நான் எதிர்பார்க்கும் இன்னொரு பந்துவீச்சாளர் ரஷித் கான். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு இவர் முக்கியக் காரணமாக இருக்கப் போகிறார். அவர் இதை டெஸ்ட் கிரிக்கெட்டாக எண்ணவேண்டும். டி20 ஆட்டத்திலும் அவர் பந்துவீசும் முறையைக் கணிக்க முடியாததால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதை அவர் தொடரும்போது, பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை அடிப்பார்கள். இதன்மூலம் அவர் அணிக்கு மிகவும் உபயோகமாக இருப்பார் என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.