ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

இந்திய அணிக்கு மோசமான நாள்; ஆடவர், மகளிர், யு-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி தோல்வி!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று (டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை) மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2024, 7:14 pm IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று (டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை) மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்று (டிசம்பர் 8) இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதேபோல, ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (டிசம்பர் 8) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் அடிலெய்டு போட்டியில் தோல்வியடைந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிரணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த கேப்டன் முகமது அமான் தலைமையிலான இளம் இந்திய அணி என இந்த நாள் (டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை) இந்திய அணிக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.