தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்டேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது 16-17 வயதில் பந்துவீசத் தொடங்கியதாகவும், தொலைக்காட்சியைப் பார்த்து தனது திறமையை மெருகேற்றிக்கொண்டதாகவும், தனக்கு முறையான பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 12 விக்கெட்களுடன் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முன்னணியில் உள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில், “நான் கிரிக்கெட்டை மிகவும் தாமதமாக விளையாடத் தொடங்கினேன். நான் 16, 17 வயதில் கிரிக்கெட்டை தொடங்கினேன். அதனால் நான் தொலைக்காட்சியைப் பார்த்து கிரிக்கெட்டை விளையாடக் கற்றுக்கொண்டேன். எனக்கு யாரும் முறையான பயிற்சியும் அளிக்கவில்லை” என்றார்.
சமீப காலமாக பும்ராவின் பந்து வீச்சு குறித்து சந்தேகம் தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து பேசிய பும்ரா, “ரன்-அப் மற்றும் அவரது தனித்துவமான பந்துவீச்சுக்கான காரணத்தையும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “2018 இல் அறிமுகமானதில் இருந்து 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும், இந்தியாவில் எந்தவொரு பயிற்சியாளரும் தனது பந்துவீச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தப் பந்துவீச்சு நீண்ட காலம் நீடிக்காது என்று நினைத்தனர். நான் 6-7 மாதங்கள் விளையாடுவேன் என்றும் கூறினர்” என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது போட்டி பெர்த்தின் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொறுப்பு கேப்டன் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.
இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி டிசம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மன அழுத்தத்துடன் போராட்டம்! கிரிக்கெட் விளையாடுவதை கைவிட நினைத்தேன்: ஸ்ரேயங்கா பாட்டீல்

டி20 தொடர்களில் பும்ரா, ஹார்திக் சேர்க்கப்படாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!

பும்ரா கால்பந்து வீரரா? வருத்தம் தெரிவித்த ராம் சரண்!
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



