ஓவியர், பாடகர், எழுத்தாளர்..! சச்சினின் தூக்கத்தை கெடுத்த பௌலரின் புதிய பரிணாமம்..!

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் ஹென்றி ஒலோங்கா பற்றி...
ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் ஹென்றி ஒலோங்கா
ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் ஹென்றி ஒலோங்கா
Published on
Updated on
1 min read

ஜிம்பாப்வேயின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கா, அடிலெய்டில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஓவியம் வரைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜிம்பாப்வேயின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கா, 1998 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கரின் தூக்கத்தை கெடுத்த பந்து வீச்சாளர் என்ற சிறப்பால் இந்தியாவிலும் மிகவும் பிரபலமடைந்தார்.

ஒருவரையொருவர் மாறிமாறி புகழ்ந்துகொண்ட ஜோ ரூட், ஹாரி புரூக்!

இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை இடையேயான முத்தரப்பு தொடரின் சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் அச்சுறுத்தலாக ஒலோங்கா கருதப்பட்டார். இருப்பினும், அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 92 பந்துகளில் 124* ரன்கள் விளாசினார்.

48 வயதான ஒலோங்கா ஜிம்பாப்வே அணிக்காக 80-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒலோங்காவின் வாழ்க்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், 'தி வாய்ஸ் ஆஸ்திரேலியா' பாடல் போட்டியில் நடுவர்களைக் கவர்ந்த ஒலோங்கா வைரலானார். இப்போது, ​​ஒலோங்கா, பகுதி நேர ஓவியராகவும், சாதாரண பயிற்சியாளராகவும், நடுவராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

நியூசி. தொடருக்கான ஆஸி. அணியில் ஜோர்ஜியா சேர்ப்பு!

இதுகுறித்து ஒலோங்கா கூறுகையில், “நான் ஆஸ்திரேலியாவை நேசிக்கிறேன். நான் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்” என்றார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஒலோங்கா கலந்து கொண்ட போது மைதான ஓவியம் வரைந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஒலோங்கா கடைசியாக 2003 ஓடிஐ உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்காக விளையாடினார். அதன் பிறகு ஜிம்பாப்வேயில் நடந்த அரசியல் காரணங்களால், அவர் அணியில் இருந்து விலக நேரிட்டது.

கிரிக்கெட்டில் தீவிரமாக அவர் ஈடுபடவில்லை என்றாலும், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..! மீண்டு வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com