பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அசத்தலான சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32-ஆவது சதத்தை எட்டியிருக்கும் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் (10) விளாசியவா் என்ற பெருமையை பெற்று, இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமன் செய்திருக்கிறாா்.
முதல் செஷனில் அசத்திய இந்திய பௌலா்கள், பின்னா் தடுமாற்றத்தை சந்தித்தனா்.
இந்தியாவின் ஃபீல்டிங் அமைப்புமே கேள்விக்குள்ளானது. ஸ்மித், ஹெட் உள்பட 5 பேரின் விக்கெட்டை சரித்து வழக்கம்போல் ஜஸ்பிரீத் பும்ரா அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கேஎல் ராகுலை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இதையடுத்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 394 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.
எஞ்சிய இரண்டு நாள்கள் மட்டும் உள்ள நிலையில் இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸும், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸும் இன்னும் விளையாட வேண்டியிருப்பதால் இந்த டெஸ்ட் பெரும்பாலும் டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!

10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் லக்னௌ அணி!

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

மகளிா் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10; இந்தியா தடுமாற்றம் 105/6
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


