மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

News image

சஞ்சு சாம்சன்

Updated On :19 டிசம்பர் 2024, 1:44 pm IST

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே தொடர் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அணி விவரத்தை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள அணியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கேரள அணிக்கான முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-2025 ஆம் ஆண்டு ஷையத் முஷ்டாக் அலி தொடருக்கான கேரள அணியை வழிநடத்திய சஞ்சு சாம்சன் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றாலும், கேரள அணியால் நாக்-அவுட் சுற்றுகளுக்கு முன்னேற முடியவில்லை.

முதலில் விஜய் ஹசாரே தொருக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், இறுதியாக வெளியிட்டப்பட்ட 19 பேர் கொண்ட பெயர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

சஞ்சு சாம்சன் தன்னால் முகாமுக்கு வரமுடியாது என்று கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதனால், அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து ஷையத் முஷ்டாக் அலி போட்டியின் போது காயமடைந்த மூத்த வீரர் சச்சின் பேபி பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

கேரள அணியை சல்மான் நிசார் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் 40 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசியிருந்த சஞ்சு சாம்சன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 2 சதங்கள் விளாசி அசத்தினார். ஷையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அரைசதம் உள்பட 135 ரன்கள் எடுத்திருந்தார்.

கேரள அணி: சல்மான் நிசார் (கேப்டன்), ரோஹன் குன்னும்மால், ஷோன் ரோஜர், முகமது அசாருதீன் (விக்கெட் கீப்பர்), ஆனந்த் கிருஷ்ணன், கிருஷ்ண பிரசாத், ஜலஜ் சக்சேனா, ஆதித்ய சர்வதே, சிஜோமோன் ஜோசப், பாசில் தம்பி, பாசில், நிதீஷ், ஈடன் ஆப்பிள் டாம், ஷரஃபுதீன் , அகில் ஸ்கரியா, விஸ்வேஷ்வர் சுரேஷ், வைஷாக் சந்திரன், அஜ்னாஸ் (விக்கெட் கீப்பர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.