ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

54 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே! ஆப்கன் அபார வெற்றி!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆப்கன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 1:24 pm

DIN

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி ஹராரே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் மருமானி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி, செடிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இருவரும் இணைந்து அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

முதல் விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்த நிலையில் அப்துல் மாலிக் 84 ரன்களில் அவுட்டானார். அவருக்குப் பின்வரிசையில் வந்தவர்கள் யாரும் சரியாக சோபிக்கவில்லை. இருப்பினும் தனது பாணியில் அதிரடியாக விளையாடிய செடிகுல்லா அடல் 128 பந்துகளில் 104 ரன்கள்(8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி வீழ்ந்தார்.

முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 54 ரன்களுக்கு சுருண்டது.

ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராஸா 19 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 16 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில், கஸன்பார், நவீன் ஜத்ரன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.