தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

உற்சாகமாக இருக்கிறது..! ஆஸி. அணித்தேர்வு குறித்து முன்னாள் வீரர் கருத்து!

ஆஸி. டெஸ்ட் அணியில் இளம் வீரரை சேர்த்திருப்பது உற்சாகத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

News image

சாம் கொன்ஸ்டாஸ் (இளம் ஆஸி. வீரர்)

Updated On :21 டிசம்பர் 2024, 3:43 pm IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இளம் வீரரை சேர்த்திருப்பது உற்சாகத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.

4ஆவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே போட்டியாக டிச.26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரில் சாம் கொன்ஸ்டாஸ் என்ற 19 வயது இளைஞர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 4ஆவது இளமையான டெஸ்ட் வீரராக இருக்கிறார். இதற்கு முன்பு பாட் கம்மின்ஸ் 2011இல் அவ்வாறு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம் கொன்ஸ்டாஸ் ஷீல்டு தொடரில் 2 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். 1993இல் ரிக்கி பாண்டிங்கிற்கு பிறகு இந்த சாதனையை கொன்ஸ்டாஸ் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியுடனான பிரைம் மினிஸ்டர் அணியில் கொன்ஸ்டாஸ் சதம் அடித்துள்ளார். யு-19 வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்துள்ளார். பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

உற்சாகம் அளிக்கிறது

சாம் கொன்ஸ்டாஸ் தேர்வு குறித்து முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியதாவது:

நான் இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கு எதிரான் ஆள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்கள் புதியதாக சேர்க்கப்படவில்லை. சாம் கொன்ஸ்டாஸை அணியில் சேர்த்திருப்பது உற்சாகத்தை தூண்டுகிறது என்றார்.

சமீபத்தில் ஜில்லஸ்பி பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முடிந்துவிடுவதில்லை

அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளது குறித்து ஜில்லஸ்பி, “அது நிச்சயமாக மெக்ஸ்வீனிக்கு வருத்தமாக இருக்கும். உலகின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானது மிகவும் கடுமையானதாக இருக்கும். அவர் மீண்டு வருவாரென நம்புகிறேன்.

இத்துடன் உலகம் முடிந்துவிடுவதில்லை. 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். எங்கே சரிசெய்ய வேண்டுமென அவருக்குத் தெரியும்”என்றார்.

5ஆவது பௌலிங் ஆப்சன்

மிட்செல் மார்ஷுக்கு பதிலாக வெப்ஸ்டரை ஆஸி. சிந்திக்க வேண்டும். அலெக்ஸ் கேரி முன்னதாகவும் வெப்ஸ்டர் 7ஆவது இடத்திலும் களமிறங்க வேண்டும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.