தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் ரேணுகா சிங் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

ஸ்மிருதி மந்தனா, ரேணுகா சிங்

Updated On :22 டிசம்பர் 2024, 8:09 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) வதோதராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

ஸ்மிருதி மந்தனா அசத்தல்

முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அசத்தலான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 34 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக எஃபி பிளெட்சர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஷிமைன் கேம்பெல் 21 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டிட்டாஸ் சாது, தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.