வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி, பும்ராவை பார்க்க விரும்பும் முன்னாள் வீரர்!

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பார்க்க விரும்புவதாக முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா

Updated On :23 டிசம்பர் 2024, 9:44 pm IST

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். அவர் அடுத்த சீசனில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

முன்னாள் வீரர் விருப்பம்

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ள நிலையில், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த இந்திய வீரர் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்திய வீரர்கள் பலரும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.