
ஆஸி. பேட்டர் டிராவிஸ் ஹெட்டை குறித்து புகழ்ந்துபேசியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிக் சேப்பல்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் 1-1 என சமநிலையில் இருக்கின்றன.
4ஆவது போட்டி டிச.26இல் தொடங்குகிறது. பிங்க் பந்து கிரிக்கெட்டில் டிராவிஸ் ஹெட் 140, பிரிஸ்பேன் டெஸ்ட்டில் 152 ரன்களும் அடித்து அசத்தினார்.
பும்ரா 3 டெஸ்ட்டில் 21 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பும்ரா ஓவரில் ஹெட் 83 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 41.5ஆக இருக்கிறது. 2 முறையும் ஆட்டமிழந்துள்ளார்.
சிட்னி ஹெரால்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிக் சேப்பல் டிராவிஸ் ஹெட் குறித்து எழுதியதாவது:
பல பேட்டர்களும் பும்ராவின் வித்தியாசமான ஆக்ஷன், அதிவேகம், துல்லியமான பந்துவீச்சினால் தடுமாறி வருகிறார்கள். ஆனால், டிராவிஸ் ஹெட் அவரை மற்ற சாதாரண பந்துவீச்சாளர் போலவே விளையாடுகிறார். நோக்கத்துடன் விளையாடும் டிராவிஸ் ஹெட் பும்ரா ஓவரில் ரன்கள் மட்டும் குவிக்காமல் அவரது ரிதமையும் குழைத்துவிடுகிறார்.
ஷார்ட் பிட்ச் பந்துகளை மட்டும் சிறப்பாக விளையாடாமல் ஃபுல்லர் பந்துகளையும் சிறப்பாக டிரைவ் ஆடுகிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டிலேயே தனது பேட்டிங்கை உயர்த்திக்கொண்டவர் என்றால் அது டிராவிஸ் ஹெட்தான். அடுத்த ஆஸ்திரேலிய கேப்டனாக மாறவிருக்கிறார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்யும்போது திரையின் மீதான எனது கண்களை திசை திருப்பவே முடியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.