மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பும்ரா ஓவரில் அடித்தது எப்படி? ஆஸி. வீரர் விளக்கம்!

பும்ராவின் ஓவரில் தைரியமாக விளையாடியது குறித்து இளம் ஆஸி. வீரர் பேசியதாவது...

News image
கான்ஸ்டாஸ், பும்ரா.
Updated On :26 டிசம்பர் 2024, 11:39 am

DIN

பும்ராவின் ஓவரில் தைரியமாக விளையாடியது குறித்து இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டாஸ் எனக்கு பிடித்த ஷாட்டே ரேம்ப் ஷாட்தான் எனக் கூறியுள்ளார்.

மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 311/6 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார்.

பும்ராவின் ஓவரில் தைரியமாக சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அதிலும் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது.

பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை சாம் கான்ஸ்டாஸ் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக பயிற்சி செய்துள்ளேன்

இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:

பும்ரா கிரிக்கெட்டின் லெஜெண்டாக இருக்கிறார். அதனால், அவர்மீது சிறிது அழுத்தத்தை அளிக்கலாம் என நினைத்தேன். அது இன்று நடந்தேறியது. நான் எப்போதும் எனக்கு நானே சவாலை அளித்துக்கொள்வேன். என்னுடைய சிறந்தவற்றை நான் வெளிக்கொணர விரும்புகிறேன். அதனால் பும்ராவின் லைனை மாற்றுவது முக்கியமானது.

நான் முதல்முறையாக பும்ராவை விளையாடுகிறேன். அதனால் அவரது ஆக்‌ஷனை பழக்கப்படுத்த வேண்டும். என்னுடைய பேட்டினை அவரது பந்து சிலமுறை மிஸ் செய்தது. முதல் சில பந்துகளில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. இது ஒரு சிறந்த சவாலாக இருந்தது.

நான் ரேம்ப் ஷாட் அடித்து ஆட்டமிழந்திருந்தால் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்திருந்திருக்கும். ஏனெனில் நான் அதற்காக நிறைய பயிற்சி செய்துள்ளேன். அதுதான் எனது பாதுகாப்பான ஷாட் என்பேன். இளமையாக இருப்பதன் அழகு அதுதான். அது சிறிது எளிமையானது. பந்துவீச்சாளருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க அதுதான் எனது சிறந்த வழி.

மோதல் நல்லது

நான் எனது கையுறைகளை சரிசெய்து வந்துகொண்டிருந்தேன். விராட் தெரியாமால் மோதிவிட்டதாக நினைக்கிறேன். கிரிக்கெட்டில் மிகுந்த உணர்ச்சியில் அப்படி நடக்கும்.

என்னைப் பொறுத்தவரை சுந்தந்திரமாக விளையாட வேண்டும். எனக்கு சில ரன்கள் அதிர்ஷ்டவசமாகவும் வந்தன. நான் யாருடைய ஓவரை விளையாடினாலும் சவால் அளிக்க விரும்புகிறேன். என்னுடைய சிறந்த செயல்பாடுகளை அளிக்க முயற்சிக்கிறேன்.

அது சில நேரங்களில் மோதல்களில் முடிகிறது. அதுவும் எனக்கு நல்லதுதான். அதுதான் எனது சிறந்த பங்களிப்பை வெளிக்கொணரும் என நினைக்கிறேன்.

கம்மின்ஸும் அணி வீரர்களும் என்னிடம் நன்றாக பழகுகிறார்கள். நான் நானாக இருக்கிறேன். அதிகமாக ரன்கள் குவித்ததால்தான் இங்கு இருக்கிறேன். நான் செய்வதற்கு இதுதான் சரியான கணம் என நினைக்கிறேன். அது நடந்தும்விட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.