சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாகிஸ்தான் டெஸ்ட்: தெ.ஆ. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வுசெய்துள்ளது.

News image
தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணி கேப்டன்கள். - படம்: எக்ஸ் / பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
Updated On :26 டிசம்பர் 2024, 9:05 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வுசெய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் செஞ்சுரியன் திடலில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

14 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 36 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் செஷன் முடிவில் பாகிஸ்தானின் ஷான் மசூத் - 17 (58) ரன்களும் சைம் அயூப் 14 (31) ரன்களும் எடுத்துள்ளார்கள்.

14.1 ஆவது ஓவரில் ஷான் மசூத் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது.

இந்த டெஸ்ட்டில் தெ.ஆ. வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.