திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

News image
டேரில் மிட்செல்- படம் | AP
Updated On :28 டிசம்பர் 2024, 10:39 am

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது.

நியூசிலாந்து - 172/8

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. டிம் ராபின்சன் (11 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா (8 ரன்கள்), மார்க் சாப்மேன் (15 ரன்கள்), கிளன் பிளிப்ஸ் (8 ரன்கள்) மற்றும் மிட்செல் ஹே (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். டேரில் மிட்செல் 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். மைக்கேல் பிரேஸ்வெல் 33 பந்துகளில் அதிரடியாக 59 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இலங்கை தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ, மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மதீஷா பதிரான ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்து வெற்றி

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தைத் தந்த போதிலும், அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா 60 பந்துகளில் 90 ரன்களும் (7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), குசல் மெண்டிஸ் 36 பந்துகளில் 46 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

14-வது ஓவரின்போது 121 ரன்கள் எடுத்து வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இலங்கை அணி, அடுத்த 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி மற்றும் ஸகாரி ஃபோல்க்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.