உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..? இந்தியா தகுதிபெறுமா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுமா..?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..? இந்தியா தகுதிபெறுமா..!
Published on
Updated on
2 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் யார்..? வாய்ப்பு யாருக்கு..? இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுமா.. என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

2023 - 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக இருந்த இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றதால் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என எதிர்பார்ப்புகள் எழுந்தாலும், இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இறுதிப் போட்டிக்குச் செல்லும் முனைப்பில் உள்ளன.

ஆஸ்திரேலியா - 62.50% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள், இலங்கையுடன் இலங்கையில் நடைபெறும் 2 போட்டிகள்.

ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 76.32% புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா மீதமுள்ள 7 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்றால் போதும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஸ் தோல்வியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் தொடரை டிரா செய்யும் பட்சத்தில் இலங்கைக்கு எதிரான 2 போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய உள்ளது.

பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை மோசமான சாதனைகள் வைத்திருக்கும் ஆஸ்திரேலியா வெற்றிபெற முனைப்பு காட்டும்.

இந்தியா - 58.33% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள்.

5 போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 69.30% புள்ளிகளைப் பெறும்.

இரண்டு முறை உலக டெஸ்ட் போட்டிகளில் ரன்னர்-அப் ஆன இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்து மண்ணைக் கவ்வியது. இதனால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து நடையைக் கட்டவேண்டியதுதான்.

இலங்கை - 55.56% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள், இலங்கையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகள்.

இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 69.23% புள்ளிகளைப் பெறும். ஆனால், 0.07% புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்குச் செல்லாது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றியின் மூலம் மீண்டும் இறுதிச்சுற்றுக்கான போட்டியில் நுழைந்தது இலங்கை. நவம்பர் இறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இலங்கை அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணியில் சிறப்பாக விளையாடிவரும் கமிந்து மெண்டிஸ் தனது முதல் 12 இன்னிங்ஸில் சரசாரியாக 94.30 வைத்துள்ளார். பந்துவீச்சில் பிரபாத் ஜெய்சூரியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நியூசிலாந்து - 54.55% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள்.

இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றால் 64.29% உத்தேசப் புள்ளிகளைப் பெறும்.

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி நியூசிலாந்துக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. அதே வேகத்தில் இங்கிலாந்தை சந்திக்கிறது நியூசிலாந்து. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தத் தொடரை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா - 54.17% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: இலங்கை - 2 டெஸ்ட், பாகிஸ்தான் - 2 டெஸ்ட்

4 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 69.44% புள்ளிகளைப் பெறும்.

இங்கிலாந்து - 40.79% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: நியூசிலாந்து - 3 போட்டிகள்

3 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 48.86% புள்ளிகளைப் பெறும்.

பாகிஸ்தான் - 33.33 % புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: தெ.ஆ - 2 போட்டிகள், மே.இ. தீவுகள் - 2 போட்டிகள்

4 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக  52.38% புள்ளிகளைப் பெறும்.

வங்கதேசம் - 27.50% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: மே.இ. தீவுகள் - 2 போட்டிகள்

2 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 39.58% புள்ளிகளைப் பெறும்.

மேற்கிந்திய தீவுகள் - 18.52% புள்ளிகள்

மீதமுள்ள போட்டிகள்: வங்கதேசம் - 2 போட்டிகள், பாகிஸ்தான் - 2 போட்டிகள்

4 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ஆட்டங்கள் முடிவில் உத்தேசமாக 43.59% புள்ளிகளைப் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com