2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிக்கான அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும், தற்போது உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு முன் இந்திய அரசுடனான ஆலோசனைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபியின் போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மார்ச் 10 அன்று ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும்.
கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. லாகூரில் இறுதிப் போட்டி உள்பட ஏழு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கராச்சியில் தொடக்கப் போட்டியும், அரையிறுதி போட்டியும் நடைபெறுகிறது. ராவல்பிண்டியில் மற்றொரு அரையிறுதிப் போட்டியும் லீக் சுற்றுக்கான ஐந்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அட்டவணை
பிப்ரவரி 19: நியூசிலாந்து - பாகிஸ்தான் (கராச்சி)
பிப்ரவரி 20: வங்கதேசம் - இந்தியா (லாகூர்)
பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா (கராச்சி)
பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 23: நியூசிலாந்து - இந்தியா (லாகூர்)
பிப்ரவரி 24: பாகிஸ்தான் - வங்கதேசம் (ராவல்பிண்டி)
பிப்ரவரி 25: ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 26: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)
டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ரிஷப் பந்த், கில் முன்னேற்றம்! விராட் கோலி, ரோகித்துக்கு சரிவு!
பிப்ரவரி 27: வங்கதேசம் - நியூசிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (ராவல்பிண்டி)
மார்ச் 1: பாகிஸ்தான் - இந்தியா (லாகூர்)
மார்ச் 2: தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து (ராவல்பிண்டி)
மார்ச் 5: முதலாவது அரையிறுதி (கராச்சி)
மார்ச் 6: 2-வது அரையிறுதி (ராவல்பிண்டி)
மார்ச் 9: இறுதிப்போட்டி (லாகூர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மார்ச் 13 வரை நீட்டிப்பு!

மகளிா் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


