

ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் வென்றார்.
அக்டோபரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த அமெலியா கெர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி முதல் கோப்பையை வெல்லுவதற்கு அணிக்கு முக்கிய பங்காற்றினார்.
இவர் ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வெல்லுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதான 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் வென்றுள்ளார்.
உலகக்கோப்பைக்குப் பின்னரும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய அமெலியா கெர் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 4 விக்கெட்டுகளும், 23 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தார்.
டி20 உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா 160 ரன்கள் மற்றும் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அசத்தினார். இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும், அவர் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.