தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரர் நோமன் அலி!

ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
நோமன் அலி
Updated On :12 நவம்பர் 2024, 2:13 pm

DIN

ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி சார்பில் ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி, சிறந்த வீரருக்கான விருது நவம்பர் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களான நோமன் அலி மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் நோமன் அலி அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய போதும் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்று வரலாறு படைத்தது. இந்த இரண்டு போட்டியிலும் சராசரி 13.85 உடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய நோமன் அலி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதுகுறித்து நோமன் அலி கூறுகையில், “இந்த மாதத்தின் ஐசிசி சிறந்த வீரராக தேர்வானதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க சொந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிய அனைத்து வீரர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்” என்றார்.

நோமன் அலி, இரண்டு டெஸ்ட் போட்டிகளின் இரண்டு ஆட்டத்திலும் 11/147 மற்றும் 9/130 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மூன்றாவது டெஸ்டில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்களுக்கு தத்தளித்த பாகிஸ்தான் அணியை கடைசி கட்டத்தில் அதிரடியாக 45 ரன்கள் விளாசி 77 ரன்கள் முன்னிலை பெற உதவினார்.

மேலும், கடைசி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை வெறும் 112 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.