விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.

அர்ஷ்தீப் சிங் - படம் | AP

Published On :

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று (நவம்பர் 15) நடைபெறுகிறது.

அர்ஷ்தீப் சிங் சாதனை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமாரை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

யுஸ்வேந்திர சஹால் - 96 விக்கெட்டுகள்

அர்ஷ்தீப் சிங் - 92 விக்கெட்டுகள்

புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்டுகள்

ஜஸ்பிரித் பும்ரா - 89 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.