பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரியாதை!

பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸ் நினைவாக சிறப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளது.
பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரியாதை!
Published on
Updated on
1 min read

பந்து தாக்கி பலியான ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூயூஸ் நினைவாக சிறப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடந்த உள்ளூர் கிக்கெட் போட்டியில் சீன் அப்போர்ட் வீசிய பந்து, 63* ரன்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹூயூஸின் தலையில் பலமாக தாக்கியதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதையும் படிக்க..:72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!

அவரது 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டியின் போது சிறப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், வரவிருக்கும் ஆஸ்திரேலியா ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பையின் மூன்று போட்டிகளிலும் விளையாடும் வீரர்கள் தங்களது கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடுவாடுவார்கள் என்றும், ஆஸ்திரேலிய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..: மீதமுள்ள போட்டிகளில் ராகுலின் இடத்தை மாற்றாதீர்கள்: முன்னாள் வீரர் கருத்து!

தனது 26 ஆம் வயது பிறந்தநாளுக்கு சில நாள்கள் முன்னதாக பரிதாபமாக பலியான பிலிப் ஹூக்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிவந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் பந்து தாக்கி பலியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

அவர் நினைவாக ஆவணப்படம் ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதையும் படிக்க..: முதல்நாள் முடிவில் இந்தியா அபாரம்: ஆஸி. 7 விக்கெட்டுகள் இழந்து திணறல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com