ரூ.3.40 கோடிக்கு ரஞ்சி கோப்பை நாயகனை வாங்கிய சிஎஸ்கே! யார் இந்த அன்ஷுல் காம்போஜ்?

அன்ஷுல் காம்போஜை சிஎஸ்கே ரூ.3.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
அன்ஷுல் காம்போஜ்
அன்ஷுல் காம்போஜ்
Published on
Updated on
1 min read

அன்ஷுல் காம்போஜை சிஎஸ்கே ரூ.3.40 கோடிக்கு வாங்கியுள்ளது.

முன்னாள் மும்பை அணி வேகப்பந்துவீச்சாளரான அன்ஷுல் காம்போஜின் அடிப்படை விலை ரூ.20 லட்சத்தில் தொடங்கியதும், அவரை வாங்குவதற்கு தில்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக மோதின.

இதையும் படிக்க.: புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட்டை தட்டித் தூக்கிய ஆர்சிபி! மும்பையில் தீபர் சாஹர்!

அவரின் விலை ரூ.3 கோடிக்கு மேல் உயர்ந்ததால். தில்லி மற்றும் மும்பை அணிகள் விலகியதால், ஒருவழியாக சென்னை அணி அவரை ரூ.3.40 கோடிக்கு தட்டித் தூக்கியுள்ளது.

23 வயதான அன்ஷுல் காம்போஜ், 17 டி20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிக்க.: ரஞ்சி கோப்பை: 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹரியாணா வீரர் சாதனை!

யார் இந்த அன்ஷுல் காம்போஜ்?

ரஞ்சி கோப்பையில் கேரளத்துக்கு எதிரான போட்டியில் ஹரியாணா அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். இந்தப் போட்டியின் 30.1 ஓவர்கள் பந்துவீசிய அன்ஷுல் காம்போஜ் 49 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

இதையும் படிக்க.: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.