புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட்டை தட்டித் தூக்கிய ஆர்சிபி! மும்பையில் தீபக் சாஹர்!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வாங்கியுள்ளது.
ஜோஸ் ஹேசில்வுட் | புவனேஸ்வர் குமார்
ஜோஸ் ஹேசில்வுட் | புவனேஸ்வர் குமார்
Published on
Updated on
1 min read

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வாங்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வருகிறது.

ஷர்துல் தாக்கூர், பிருத்வி ஷா மற்றும் அஜிங்க்யா ரஹானே, கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் விற்கப்படாமல் ஏமாற்றமளித்தனர்.

34 வயதான புவனேஷ்வர் குமார், ஐபிஎல்லில் இதுவரை 287 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புவனேஷ்வர் குமார் கடைசியாக 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவருடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஹேசில்வுட்டையும் ஆர்சிபி அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியுள்ளது.

அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை மும்பை அணி ரூ.9.25 கோடிக்கு வாங்கியுள்ளது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் துஷார் தேஷ்பாண்டேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.6.50 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியாவை ஆர்சிபி அணி ரூ.5.75 கோடிக்கும், நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல் ரூ. 4.20 கோடிக்கும் வாங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.