அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

வலைப் பயிற்சியில் ஷுப்மன் கில்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

News image

ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Updated On :29 நவம்பர் 2024, 3:23 pm IST

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியிலிருந்து விலகினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

வலைப் பயிற்சியில் ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக முதல் போட்டியில் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் அந்த அளவுக்கு பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

ரோஹித் சர்மா அணியில் இல்லாததால், முதல் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதனால், கே.எல்.ராகுல் 3-வது வீரராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் ஈடுபட்டு வருகிறார்.

காயத்திலிருந்து மீண்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.