முதல் தர கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அரைசதங்களைவிட அதிக சதங்களடித்து அசத்தியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 26 வயதான சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் 2019-2020இல் 928 ரன்கள், 2021-2022இல் 982 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தற்போது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக மும்பை அணி பேட்டி செய்து வருகிறது. மும்பை அணிக்கு ரஹானே கேப்டனாகவும் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு ருதுராஜ் கேப்டனாகவும் செயல்படுகிறார்கள்.
முதல் நாள் முடிவில் மும்பை 237/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 2ஆம் நாளில் தேநீர் இடைவேளையில் 449/6 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியில் சர்ஃபராஸ் கான் சதத்தை கடந்து 177 ரன்களுடன் விளையாடி வருகிறார். விரைவில் சர்ஃபராஸ் கான் 200 ரன்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது.
முதல் தர கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் 4,183 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 அரைசதங்கள், 15 சதங்கள் அடங்கும். சராசரி 66.39 என்பது குறிப்பிடத்தக்கது.
அரைசதங்களைவிட சதங்கள் அதிகமாக அடிக்கும் சர்ஃபராஸுக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை என பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.