ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 மகளிா் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிா்ச்சியில் உள்ளது.
பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவுக்கு இத்தோல்வி கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபையில் நடைபெறுகிறது.
கவலை தரும் ரன் ரேட்: இந்திய அணியின் ரன்ரேட் கடும் கவலை தருவதாக உள்ளது. (-2.99). பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். நியூஸி.க்குக்கு எதிரான ஆட்டத்தில் பௌலிங், பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமையிலான இந்திய அணி சொதப்பியது.
பலம் வாய்ந்த இலங்கையை வீழ்த்திய உற்சாகத்தில் பாகிஸ்தான் அணி காணப்படுகிறது. இந்தியா எந்த வீராங்கனைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் குழப்பத்தில் உள்ளது.
கேப்டன் ஹா்மன்ப்ரீத், ஜெமீமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோா் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். பௌலிங்கில் சிறந்த பாா்மில் உள்ள பூஜா வஸ்தாா்க்கருக்கு ஒரே ஒரு ஓவா் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஸ்பின்னா் ராதா யாதவுக்கு வாய்ப்பு தர வேண்டும். பேட்டிங்கை வலுப்படுத்த தயாளன் ஹேமலதாவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
வலுவான பாகிஸ்தான் பௌலிங்:
பாகிஸ்தான் அணி நிதா தா், கேப்டன் பாத்திமா சனா, சாடியா இக்பால் ஆகியோருடன் பலுவான பௌலிங்கை கொண்டுள்ளது. முன்னணி பௌலா் டயானா பெய்க் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு கவலை தருவதாகும்.
நேருக்கு நோ்:
இரு அணிகளும் நேரு நோ் மோதிய 15 ஆட்டங்களில் இந்தியா 12-இல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பாகிஸ்தானை வென்றால் தான் நாக் அவுட் சுற்றை நினைத்து பாா்க்க முடியும் என்பதால், வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா ஆடவுள்ளது.
இன்றைய ஆட்டங்கள்:
இந்தியா-பாகிஸ்தான்.
இடம்: துபை
நேரம்: மாலை 3.30.
மே.இந்திய தீவுகள்-ஸ்காட்லாந்து
இடம்: துபை
நேரம்: மாலை 6.00.
தொடர்புடையது

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி
ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: பாகிஸ்தானை மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை - காங்கிரஸ் விமா்சனம்

உலகக் கோப்பை வில்வித்தை: அணிகள் ஏமாற்றம்; தனிநபா் ஏற்றம்
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

